இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படும் பிக் பாஸ்! பைனல் தேதி மாற்றம்
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியா முழுவதும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி என எக்கச்சக்க மொழிகளில் ஷோ நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழில் ஐந்தாவது சீசன் நடைபெறுவது போல ஹிந்தியில் 15வது சீசன் நடைபெற்று வருகிறது.
ஹிந்தி பிக் பாஸ் 15 ஷோ பைனல் வரும் ஞாயிறு (ஜனவரி 16) அன்று நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஷோ மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கப்படுவதாக சல்மான் கான் அறிவித்து இருக்கிறார். அதன் ப்ரொமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. பைனல் தற்போது ஜனவரி மாத இறுதியில் தான் நடைபெறும்.
இந்த அறிவிப்பால் பிக் பாஸ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இப்படி நாட்களை கூட்டுவது எல்லாம் தமிழ் பிக் பாஸில் நடந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.