தள்ளிப்போகும் பிக் பாஸ் ஷோ.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்
பிக் பாஸ் ஷோவுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி உட்பட பல மொழிகளில் பிக் பாஸ் ஒளிபரப்பாகிறது.
விரைவில் தமிழிலும் ஆறாவது சீசன் தொடங்கும் என கூறப்படும் நிலையில் ரசிகர்கள் அதற்காக ஏதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் ஹிந்தியிலும் சல்மான் தொகுத்து வழங்க 16வது சீசன் விரைவில் தொடங்க இருந்தது. ஆனால் தற்போது அது தள்ளிபோவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Khatron Ke Khiladi 12 மற்றும் Jhalak Dikhla Jaa ஆகிய ஷோக்களால் பிக் பாஸ் 16 ஷோ தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.
BB16 எப்போது தான் தொடங்கும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும் . அனேகமாக நவம்பர் மாதத்திற்கு அது தள்ளிப்போய் இருக்கலாம் என தகவல் பரவி வருகிறது.