பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் 17 போட்டியாளர்கள் இவர்கள் தானா.. வெளியான முழு லிஸ்ட் இதோ
விஜய் டிவியில் வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது.
கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கியது போல் பிக் பாஸ் 5வது சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு, நடிகர் நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன், நடிகை பவானி ரெட்டி, பாடகி சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி ஆகிய பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
அதே போல், ஷகீலா மகள் மிலா,மாடல் நடியா, நடிகை சூசன், கோபிநாத் ரவி, நிரூப் நந்தா, விஜே அபிஷேக், மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சிபி சந்திரன், நமீதா மாரிமுத்து, பாடகி இசைவாணி, நடிகர் வருண் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகிறது.
இது 90% சதவீதம் உறுதியான தகவல் என்று, பல ஊடக வட்டாரங்கள் இணையத்தில் தெரிவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.