சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ்.. PETA அமைப்பு எதிர்ப்பு
பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் வீட்டில் போட்டியாளர்கள் செய்யும் சில விஷயங்கள் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறும்.
அப்படி தற்போது ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசன் கடந்த வாரம் தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
கழுதை
பிக் பாஸ் 18ல் போட்டியாளராக 18 பேர் வந்திருக்கின்றனர். அவர்களோடு ஒரு கழுதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருப்பது தான் தற்போது பேசப்படும் ஒரு சர்ச்சையாக மாறி இருக்கிறது.
வழக்கறிஞர் குணரத்னா என்பவர் பிக் பாஸ் போட்டியாளராக வந்திருக்கும் நிலையில் அவரது வளர்ப்பு கழுதையும் பிக் பாஸ் கொண்டுவந்திருக்கிறார்.
விலங்குகளை இப்படி பொழுதுபோக்கிற்காக அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து PETA அமைப்பு தற்போது எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை போட காரணமாக இருந்தது PETA அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பிக் பாஸ் கழுதையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றனர் PETA.