பிக் பாஸ் சீசன் 5வின் அன்பு கூட்டணி இதுதானா..? கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் 5 மிகவும் பிரமாண்டமான முறையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் துவங்கப்பட்டது.
இதில் 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர். நமீதா மாரிமுத்து மற்றும் நாடிய என இரு நபர்கள் வெளியேறியுள்ள காரணத்தினால் தற்போது 15 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.
கடந்த பிக் பாஸ் சீசன் 4ல் அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ரியோ, ஜித்தன் ரமேஷ் என ஒரு கூட்டணியாக இருந்தனர்.
இவர்களுக்கு அன்பு கூட்டணி என்று கூறப்பட்டது. மேலும் சில நெட்டிசன்கள் இந்த பிக் பாஸ் சீசன் 4ன் அன்பு கூட்டணியை இணையத்தில் கலாய்த்தெடுத்து வந்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் 4 போலவே பிக் பாஸ் 5வில் புதிதாக அன்பு கூட்டணி உருவாகியுள்ளதாம்.
ஆம், பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் தான் இந்த பிக் பாஸ் சீசன் 5வின் அன்பு கூட்டணி என்று கூறப்படுகிறது.
இதனால் தற்போது பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப்பை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் மீம் போட்டு கலாய்த்தெடுத்து வருகிறார்கள்.