பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் பைனல்.. 50 லட்சம் பரிசு.. வெல்ல போவது யார்..
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் தற்போது 5 போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆம், டாப் 6ல் இருந்து தாமரை கடைசியாக வெளியேற தற்போது ராஜு, நிரூப், பிரியங்கா, அமீர் மற்றும் பாவ்னி பைனலுக்கு சென்றுள்ளார்கள்.
இதிலிருந்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக போவது யாரென்று ரசிகர்கள் தற்போது வரை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
முதல் வாரத்தில் இருந்து இன்று வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வரும் போட்டியாளர் ராஜுவாக இருக்கிறார்.
அமீர், நிரூப் இருவரும் போட்டியின் வாயிலாக பைனல் போட்டிக்கு சென்றனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் ஆளாக பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜு தான்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, ராஜு தான் பிக் பாஸ் சீசன் 5வின் டைட்டில் வின்னர் ஆக இருக்கமுடியும் என்று கூறுகின்றனர்.
இன்னும் சிலர் பிரியங்காவிற்கும் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் யார் அந்த ரூ. 50 லட்சம் பரிசு தொகையும், பிக் பாஸ் டைட்டிலையும் வெல்ல போகிறார்கள் என்று..