பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக களமிறங்கும் தொழிலதிபர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
விஜய் டிவியில் வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், Beauty Saloon நடத்தி வரும் தொழிலதிபரான ரேணுகா பிரவீன் பிக்பாஸ் பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ரேணுகா பிரவீன் சென்னையில் Beauty Saloon வைத்து நடத்தி வருகிறார்.
திரை பிரபலங்கள் குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் அவரின் ரெகுலர் கஷ்டமராக உள்ளனர் என்று தகவல் கூறுகின்றனர்.