ஒரே ஒரு பலூன்.. ராஜூவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற அக்ஷரா
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவருக்கும் கடினமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தனை நாள் கூலாக பங்கேற்று கொண்டிருந்த ராஜு இன்று ரொம்ப சீரியஸாக மாறிவிட்டார். பலூன் உடைக்கும் டாஸ்க் தொடங்கியதும் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் டார்கெட் செய்து விளையாடி கொண்டிருந்தனர்.
அக்ஷரா ராஜுவின் பலூனை உடைக்க மாட்டேன் என வாக்கு கொடுத்தார். அதனால் ராஜு அவரை டார்கெட் செய்யவே இல்லை. ஆனால் இறுதியில் ராஜுவின் ஒரு பலூன் மட்டும் மிஞ்சி இருக்கும்போது அக்ஷரா சென்று அந்த பலூனை உடைத்துவிட்டார். இதனால் ராஜு அவர் மீது கடும் கோபம் அடைந்தார்.
இறுதியில் அக்ஷரா மற்றும் அமீர் ஆகிய இருவர் தான் முதலிடத்திற்கு போராடினார்கள்.
ராஜு அந்த நேரத்தில் அக்ஷரா உடன் வாக்குவாதம் செய்தார். நீ என்னிடம் பொய் சொல்லி ஏமாத்திட்ட என சொல்லி சண்டை போட்டார். கோபத்தில் உச்சிக்கே சென்ற அவர் போட்டியின் இடையில் புகுந்து அக்ஷராவின் சில பலூன்களை உடைத்துவிட்டார்.
இது தவறு என வருண் உள்ளிட்ட மற்றவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.