சிபி கொடுத்த அட்வைஸ்.. அடிச்சி பேசுவாரா ராஜு? பிக் பாஸ் லேட்டஸ்ட் ப்ரொமோ
பிக் பாஸில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஐந்தாவது சீசன் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இத்தனை நாள் நடித்துக்கொண்டிருக்கிறார் என தேர்வு செய்து ஒருவரை பைனலுக்கு அனுப்ப வேண்டும், அல்லது ஒருவரை காரணத்துடன் தேர்வு செய்து உடனே எலிமினேட் செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறினார்.
இதற்காக பல மணி நேரம் வாங்குவாதம் நடைபெற்றது. நிரூப் இறுதிவரை தான் தான் அப்படி இருப்பது என சொல்லி இறுதியில் பைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். அது பற்றி இன்றைய ஷோவுக்கு வந்திருக்கும் சிபி மறைமுகமாக பேசி இருக்கிறார்.
நிரூப் பைனலுக்கு செல்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார், ஆனால் இன்னும் கெத்தாக விளையாடலாம் என சிபி கூறி இருக்கிறார்.
மேலும் ராஜுவுக்கு அட்வைஸ் கொடுத்த சிபி "மனதில் இருப்பதை அடிச்சி பேச வேண்டும்" என அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்.