அந்த குற்றச்சாட்டு எனக்கு சந்தோசம் தான்: என்ன பிரியங்கா இப்படி சொல்லிட்டாரே?
பிக் பாஸ் 5 இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. இந்த வாரம் நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் அமீர் வெற்றி பெற்று நேரடியாக இறுதி வாரத்திற்குள் நுழைந்தார். ஆனால் அந்த டாஸ்குகளில் பிரியங்கா மற்றும் தாமரை இடையே தான் அதிகம் சண்டை நடந்தது.
அவர்கள் எல்லைமீறிய சண்டை பற்றி நேற்று கமல் பேசினார். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடின் ப்ரொமோ வெளிவந்து இருக்கிறது. அதில் பிரியங்கா அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா பிரியங்கா என்கிற குற்றச்சாட்டை பற்றி கமல் கேட்டார்.
"இங்கயும் சரி எங்கயும் சரி.. எனக்கு லவ் கொடுத்தால் நான் இன்னும் அதிகம் லவ் கொடுப்பேன். அதை என் வெற்றிக்காக பயன்படுத்துகிறேன் என சொன்னால் அதை நான் சொந்தோஷமான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்கிறேன்" என பிரியங்கா கூறி இருக்கிறார்.
ப்ரோமோ வீடியோ இதோ..
#BiggBossTamil இல் இன்று.. #Day91 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/lNHxsoGLQT
— Vijay Television (@vijaytelevision) January 2, 2022