வேற லெவல் டாஸ்குகள்.. கதறும் போட்டியாளர்கள்! பிக் பாஸ் 5ல் ரியல் போட்டி ஆரம்பம்
இந்த வாரம் பிக் பாஸ் 5ல் அணைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டுவிட்டனர். அதில் இருந்து தப்பிக்க சில டாஸ்குகள் கொடுக்கப்படும் என பிக்பாஸ் அறிவித்தார். அதன் படி வரிசையாக பல வித்யாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் மாட்டு சாணம் தண்ணீரில் மூழ்கி அடியில் இருக்கும் காயங்களை எடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது காட்டப்பட்டு இருந்தது. அதில் தாமரை, அபினை ஆகியோர் எந்த தயக்கமும் இல்லாமல் போட்டியில் கலந்துகொண்டனர்.
ராஜு அதை கையில் பிடித்து எண்ணுவதற்கே சங்கடப்பட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது வெளிவந்திருக்கும் மூன்றாம் ப்ரோமோவில் இன்னும் கடினமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருப்பது காட்டப்பட்டு உள்ளது. இது வேற லெவலில் இருக்கிறது என பிக் பாஸ் ரசிகர்களே சற்று ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
பச்சை முட்டையை குடிக்க வேண்டும் என டாஸ்கில் வந்த நிலையில் ராஜு அதை செய்ய முடியாமல் கீழே துப்பி இருக்கிறார்.