பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. சோகத்தில் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.
இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு மற்றும் சுருதி என ஐந்து நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம், யாரும் எதிர்பாரத, முக்கிய போட்டியாளராக ரசிகர்களால் கருதப்பட்ட, மதுமிதா பிக் பாஸ் சீசன் 5 வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட மதுமிதா, நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆவது, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் மதுமிதாவின் ரசிகர்கள் பலரும், வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
Wish you all success in future. Good entertainer ??????#Madhumitha Eliminated #biggbosstamil #Biggbosstamil5 pic.twitter.com/MnS63g0QWm
— Imadh (@MSimath) November 13, 2021