பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் இவர் தான்.. வெளிவந்த ஷாக்கிங் லிஸ்ட்
சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய 5வது தற்போது விஜய் டிவியில் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் கூட, யாரும் எதிர்பார்க்காத முறையில், அபிஷேக் வீட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு என நான்கு நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மீதம் 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் பிக் பாஸ் 5ன் டைட்டில் வின்னர் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜு என்று தெரிகிறது. மேலும், பிரியங்கா தான் பிக் பாஸ் 5வின் ரன்னர் அப் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இதுமட்மின்றி இந்த லிஸ்டில், எந்தெந்த வாராம் எந்தெந்த போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனால், பலரும் பிக் பாஸ் 5 ஒரு பொய்யான ஆட்டமா என்று சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.