பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள போகும் 3 உறுதியான போட்டியாளர்கள்- இவர்கள் தானா?
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் இப்போது பெரிய ஹிட் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் 6வது சீசன் குறித்த புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
தற்போது நிகழ்ச்சியும் வரும் அக்டோபர் 9ம் தேதி மாலை ஒளிபரப்பாக இருக்கிறது.
கமல்ஹாசன் இடம்பெற நிகழ்ச்சி ஒளிபரப்பு புரொமோ வந்ததில் இருந்து ரசிகர்கள் யார் யார் வருவார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகளை தேட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் சரியாக கலந்துகொள்ள இருப்பவர்களின் விவரங்கள் வெளியாகவில்லை.
உறுதியான போட்டியாளர்கள்
ஆனால் நமக்கு கிடைத்த தகவல்படி சீரியல் நடிகை சத்யா, நடன இயக்குனர் ராபர்ட், நடிகை விசித்ரா என இவர்கள் 3 பேர் கலந்துகொள்வது உறுதி என்கின்றனர். இவர்களை தாண்டி ஜி.பி முத்து, கிரண் ரத்தோடு, பாடகி ராஜலட்சுமி, டிடி, ரக்ஷன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
தனுஷின் நானே வருவேன் திரைப்படம் எப்படி உள்ளது?- Live Updates