சீரியல் நடிகருக்கு ஜோடியாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனி... என்ன படம், போட்டோ இதோ
பிக்பாஸ் 6
வெள்ளித்திரைக்கு இப்போது மிகவும் திறமையான கலைஞர்களை அதிகம் களமிறக்கி வருகிறது சின்னத்திரை.
சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பலரும் தங்களது திறமைகளை காட்ட வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க கலக்குகிறார்கள். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
அப்படி பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் இலங்கை பெண் ஜனனி. இந்த நிகழ்ச்சி கொடுத்த பிரபலம் விஜய்யின் லியோ படத்தில் வாய்ப்பு கிடைத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
புதிய படம்
தற்போது ஜனனிக்கு நாயகியாக நடிக்கும் அளவிற்கு ஒரு படம் கிடைத்துள்ளது.
அந்த திரைப்படத்தில் பாக்கியலட்சுமி, மீனாட்சி பொண்ணுங்க சீரியல் புகழ் ஆர்யன் தான் நாயகனாக நடிக்கிறாராம்.
இவர்கள் இணையும் படத்திற்கு நிழல் என பெயரிடப்பட்டுள்ளதாம், அதுபோல திரைப்படத்தில் ரமேஷ் கண்ணா, மதன்குமார், திவ்யா கிருஷ்ணன், ஹரி விஜய் என பலரும் நடிக்கிறார்களாம். இதோ படத்தின் ஃபஸ்ட் லுக் புகைப்படம்,