விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா?
பிக்பாஸ் 6
அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்துவிட்டது. அசீம், விக்ரமன், ஷிவின் என 3 இறுதி போட்டியாளர்களில் இருந்து அசீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பிக்பாஸ் குழுவின் இந்த முடிவு மக்கள் பலருக்கு ஏற்ற முடிவாக இல்லை, இது தவறான தேர்வு என விமர்சனம் செய்து வந்தார்கள்.
விக்ரமனை போல ஷிவினிற்கும் மக்களிடம் ஆதரவு பெரிய அளவில் இருந்தது.

சீரியலில் பிரபலம்
தற்போது பிக்பாஸ் 6 பிரபலம் ஷிவின் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ஷிவின் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்கிறாராம்.
அவரே தனது இன்ஸ்டாவிலும் பாரதி கண்ணம்மா என டாக் போட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,

உதயநிதி மற்றும் கிருத்திகாவா இது- திருமணத்தின் போது எப்படி உள்ளார்கள் பாருங்க
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri