எல்லோர் முன்பும் கத்தி கதறிய ஜனனி! பிக் பாஸில் என்ன தான் நடந்தது?
ஜனனி
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவருக்கு ஆரம்பத்திலேயே ரசிகர்கள் ஆர்மி எல்லாம் தொடங்கி சமூக வலைத்தளங்களிளல் அதிகம் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இருப்பினும் அவர் போட்டியில் சரியாக விளையாடுவதில்லை என மற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து அவர் மீது புகார் கூறி வருகிறார்கள். மேலும் அஸீம் உள்ளிட்ட சிலர் ஜனனி எது பேசினாலும் அதை வைத்து பெரிய வாக்குவாதம் நடத்தி விடுகிறார்கள்.
கதறிய ஜனனி
இந்நிலையில் இன்று ஜனனி எல்லோர் முன்பும் கதறி இருக்கிறார். இந்த வாரம் ஸ்வீட் கடை டாஸ்கில் எந்த போட்டியாளர் சரியாக விளையாடவில்லை என தேர்ந்தெடுக்க பிக் பாஸ் கூறுகிறார். அப்போது விக்ரமன் வந்து ஜனனி பெயரை கூறுகிறார். ஜனனி மற்றவர்களை சார்ந்து தான் இருக்கிறார் என அவர் குற்றம்சாட்டினார்.
அப்போது அமுதவாணனும் ஜனனி பற்றி எதோ சொல்ல.. "வாக்குவாதம் பண்ணாதீங்க" என ஜனனி கேட்டுக்கொண்டார். அதன் பின் ஜனனி அதிகம் எமோஷ்னல் ஆகி கத்தி கதறி இருக்கிறார்.
அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. இதோ
துணிவு திரைப்படம் எப்படி உள்ளது தெரியுமா? ஒரே வரியில் முடித்த இசையமைப்பாளர், சூப்பர் அப்டேட்