பிக்பாஸில் விளையாடி வரும் தொகுப்பாளினி மகேஸ்வரி மகனா இவர்?- இதுவரை பார்த்திராத புகைப்படம்
பிக்பாஸ் மகேஸ்வரி
சன் மியூசிக் தொலைக்காட்சி புதியதாக வந்தபோது அதிர் தொகுப்பாளராக களமிறங்கியவர் மகேஸ்வரி. 11ம் வகுப்பு படிக்கும் போதே தொகுப்பாளினிக்காக பல ஆடிஷன்கள் சென்று பின் கல்லூரி முடித்ததும் சன் மியூசிக் மூலம் தனது பயணத்தை தொடங்கி 18 ஆண்டுகளை கடந்து இன்றும் தொடர்கிறார்.
திருமணத்திற்கு பிறகு மீடியா பக்கம் ஒரு வருடம் வராமல் இருந்த அவர் விவாகரத்து பெற்று தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். பின் புதுக்கவிதை, தாயுமானவன் உள்ளிட்ட தொடர்களில் நடித்துவந்த மகேஸ்வரி ஜீ தமிழில் அதிர்ஷ்டலட்சுமி என்ற நிகழ்ச்சியை நடத்த அது செம ரீச் கொடுத்தது.
இப்போது பிக்பாஸில் கலந்துகொண்டு நன்றாக விளையாடி வருகிறார்.

மகேஸ்வரியின் மகன்
கணவருடன் சில பிரச்சனைகளால் பிரிந்த மகேஸ்வரி சென்னையில் தனது தாய் மற்றும் மகன் கேசவனுடன் வசித்து வருகிறார். இதோ மகேஸ்வரி மகனின் அழகிய புகைப்படம்,
பிக்பாஸ் 6 வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்கில் இருப்பது இவரா?