கதிரவனை காதலிக்கிறேனா, குயின்ஸி ஓபன் டாக்- பிக்பாஸ் பிறகு முதன்முறையாக அவர் கொடுத்த பேட்டி

By Yathrika Dec 08, 2022 04:00 AM GMT
Report

பிக்பாஸ் 6

ஆரம்பத்தில் பல சர்ச்சைகளை சந்தித்து இப்போது வெற்றிகரமாக 6வது சீசன் வரை ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த 6வது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், இப்போது பாதி பேர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.

இந்த வாரம் வேறு டபுள் எவிக்ஷன் என்று கூறப்படுகிறது, இதில் யார் வெளியேறுவார்கள் என யோசித்து வருகிறார்கள். Danger Zoneல் ஆயிஷா, ராம் மற்றும் ADK 3 பேர் கடைசியில் இருக்கிறார்கள்.

கதிரவனை காதலிக்கிறேனா, குயின்ஸி ஓபன் டாக்- பிக்பாஸ் பிறகு முதன்முறையாக அவர் கொடுத்த பேட்டி | Bigg Boss 6 Queency About Kathiravan

குயின்ஸி ஓபன் டாக்

எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சியை போல இந்த சீசனிலும் காதல் கதை வருமா என்று பார்த்தால் இப்போது வரை இல்லை. ஆனால் குயின்ஸி கதிரவனை காதலிப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது, ஆனால் எதுவும் உறுதியாக தெரியவில்லை.

பிக்பாஸை விடடு வெளியேறிய குயின்ஸி ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் கதிரவனுடனான காதல் குறித்து பேசியிருக்கிறார். சிவினுக்கு கதிரவன் மீது காதல் ஏற்பட்டது, அதை அவரே கூறியிருக்கிறார், ஆனால் கதிரவன் எதுவும் தெரியாத மாதிரி இருந்துவிட்டார்.

பின்பு குயின்ஸி கதிரவனை காதலிக்கிறார் என கூறப்பட, சிவினை வெறுப்பேற்றவே நாங்கள் அப்படி Prank செய்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US