முதல் நாளே பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்! அதிர்ந்து போன போட்டியாளர்கள்
பிக் பாஸ் 6
நேற்று தான் பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் அனுப்பினார் கமல். அவர்கள் வீட்டுக்குள் சென்று ஒருவரை ஒருவர் சந்தித்து சில வார்த்தைகள் மட்டுமே பேசி இருப்பார்கள்.
அதற்குள் பிக் பாஸ் அவர்களை எல்லாம் அழைத்து ஒரு டாஸ்க் கொடுத்துவிட்டார்.
ஷாக் ஆன போட்டியாளர்கள்
'வீட்டுக்குள் வந்து சில மணி நேரம் ஆகிவிட்டது, எல்லோரையும் எடை போட்டிருப்பீர்க். இதில் நீங்கள் பார்த்ததில் உங்களுக்கு குறைவாக இம்ப்ரெஸ் செய்த போட்டியாளர்கள் யார் என்பதை சொல்ல வேண்டும். அதிக வாக்குகள் பெற்று அதில் தேர்வாகும் நான்கு போட்டியாளர்கள் வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டும்' என பிக் பாஸ் அறிவித்தார்.
இதை கேட்டு போட்டியாளர்கள் ஷாக் ஆகிவிட்டனர். வீட்டுக்குள் வந்த உடனேயே இப்படி ஒரு டாஸ்க் கொடுத்துவிட்டாரே என வெளிப்படையாகவே புலம்பினர்.
VJ விக்ரமன், இலங்கை பெண் ஜனனி உட்பட நான்கு பேர் இதன் மூலம் வீட்டுக்கு வெளியில் அனுப்பப்பட்டனர்.
கடைசி நொடியில் பிக் பாஸ் 6ல் இருந்து விலகிய நடிகை! இதுதான் காரணம்?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
