எச்சி துப்பி கொடுத்தா சாப்பிடுவியா! உப்பால் வெடித்த சண்டை.. மீண்டும் பார்முக்கு வந்த அஸீம்
ராஜா ராணி டாஸ்க்
பிக் பாஸில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ராயல் மியூசியம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் ராஜா, ராணி, தளபதி, ராஜா குரு, சேவகர்கள், பணியாளர்கள் என பல விதமான ரோல்கள் கொடுக்கப்பட்டது.
அதில் ராணியாக இருக்கும் ரச்சிதா சாப்பாட்டில் உப்பு கலந்தது பெரிய பிரச்சனையாக வெடித்து இருக்கிறது. ஷிவின் தான் உப்பு கலந்து கொடுத்திருக்கிறார். அதை ஏன் தளபதியாக இருக்கும் அஸீம் செக் செய்யல என விக்ரமன் கேள்வி எழுப்பினார்.
எச்சி துப்பு கொடுக்கணுமா
"நான் எல்லோர் தட்டிலும் எடுத்து சாப்பிட்டால் அது எச்சி ஆகிவிடும், எச்சி துப்பி எல்லோரையும் சாப்பிட சொல்ல முடியுமா" என அசீம் கேட்க, விக்ரமன் உடன் சண்டை தொடங்கியது.
என்னை களங்கப்படுத்த தான் இப்படி திட்டம்போட்டு செய்கிறார்கள் என அசீம் மற்றவர்களை குற்றம்சாட்ட, நீங்க உணவை ஏன் முதலில் சாப்பிட்டு பாக்கல என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த சண்டை பெரிதாகி ஏடிகே, தனலட்சுமி, ஆயிஷா என பலரும் அசீம் உடன் சண்டை போட்டனர். அவரும் சளைக்காமல் எல்லோரிடமும் பதில் கொடுத்து கொண்டிருந்தார்.
ஆயிஷாவுக்கு மூச்சுத்திணறல்
ஆயிஷா கத்தி கத்தி சண்டை போட்ட நிலையில் 'எதுக்கு சுகர் பேஷண்ட் மாதிரி எகிறிட்டு இருக்க' என அசீம் கேட்கிறார்.
அந்த சண்டைக்கு இறுதியில் ஆயிஷா மூச்சுத்திணறல் வந்து வெளியில் சென்றுவிட்டார்.
தமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்.. வெளியான விவரம்