எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் ஜனனி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா
இலங்கை பெண் ஜனனி தனது வாழ்க்கையில் இருக்கும் துயரங்கள் பற்றி பிக்பாஸில் பேசி இருக்கிறார்.
பிக் பாஸ்
தமிழில் பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்கி தற்போது ஒரு வாரம் மட்டுமே நிறைவடைந்து இருக்கிறது. முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் முதல் வாரத்திலேயே அதிகம் பிரச்சனைகள் போட்டியாளர்கள் நடுவில் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை பற்றி சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஜனனி
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி இன்று அவரது வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார்.
"என்னை பார்ப்பவர்கள் நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதை பார்த்து எனக்கு எந்த பிரச்னையும் இருக்காது என நினைப்பார்கள். ஆனால் அப்படி இல்லை. நான் ஸ்கூல் படிக்கும்போதே குடும்பத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை" என அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே மற்ற போட்டியாளர்கள் சென்று பட்டனை அழுத்திவிடுகிறார்கள். அது தற்போது வந்திருக்கும் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
#Day9 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/qmIarkxBVU
— Vijay Television (@vijaytelevision) October 18, 2022
தமிழ் சினிமாவின் மிகவும் பணக்கார நடிகர்கள் யார் யார்?- டாப் 10ல் இருக்கும் பிரபலங்கள் லிஸ்ட்