Bigg Boss 6: மிட் வீக் எவிக்ஷன்.. திடீரென வெளியேற்றப்பட்ட இன்னொரு போட்டியாளர்
பிக் பாஸ் 6ம் சீசன் தமிழில் பரபரப்பான இறுதி கட்டத்தில் இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஷோ முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணத்துடன் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.
அதனால் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பைனலிஸ்ட் ஆக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது எதிர்பார்க்காத விதமாக வெள்ளிக்கிழமையே ஒரு எலிமினேஷன் நடந்து இருக்கிறது.

வெளியேறியது யார்?
தற்போது மிட் வீக் எலிமினேஷனுக்கான ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அதில் ஒவ்வொரு போட்டியாளராக ஹைட்ராலிக் லிப்ட் மேல் நிற்க வேண்டும் என்றும், அது கீழே இறங்கி மேலே வரும்போது போட்டியாளர் இல்லை என்றால் அவர் எலிமினேட் ஆனதாக அர்த்தம்.
இதில் மைனா நந்தினி தான் எலிமினேட் ஆகி இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. அதனால் பைனலில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே இருக்க போகிறார்கள்.
விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனியின் உடல்நிலை.. உண்மை நிலையை சொன்ன இயக்குனர்
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri