Bigg Boss இந்த வார நாமினேஷன் லிஸ்ட்! எலிமினேஷன் இவர்தானா?
பிக் பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட் உறுதியாகி இருக்கிறது.
பிக் பாஸ் 6
பிக் பாஸ் ஆறாம் சீசன் பாதி நாட்களை கடந்துவிட்டது. ஆனால் தற்போது ஷோ எதிர்பார்த்த அளவுக்கு பரபரப்பு இல்லாமல் போரடிக்கும் வகையில் தான் சென்றுகொண்டிருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
ஜிபி முத்து வீட்டுக்குள் இருந்த நேரத்தில் கிடைத்த வரவேற்பு சமீபத்திய வாரங்களில் கிடைக்கவில்லை என உறுதியாக சொல்லலாம். அதனால் அவரை மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக கொண்டு வர வேண்டும் எனவும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
அது ஒருபுறம் இருக்க தற்போது ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி வெளியில் வந்திருக்கிறார்.
இந்த வார நாமினேஷன்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிக் பாஸ் வீட்டில் நடந்து முடிந்திருக்கிறது. போட்டியாளர்கள் முகத்தில் கிரீம் பூசி ஓபன் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது.
அதில் மைனா, ஜனனி, ரச்சிதா, குயின்சி, தனலட்சுமி மற்றும் கதிரவன் ஆகியோர் நாமினேட் ஆகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பட்டியலில் கதிரவன் அல்லது குயின்சி ஆகியோரில் ஒருவர் தான் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோழிகளுக்கு ஹன்சிகா கொடுத்த பேச்சிலர் பார்ட்டி.. எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க