பிக்பாஸில் 105 நாட்களுக்கு மேல் இருந்த 3 போட்டியாளர்களின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 6
பிரம்மாண்டத்தின் உச்சமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வந்துவிட்டது. என்னதான் இந்நிகழ்ச்சி பெரியது என்றாலும் இந்த சீசன் அவ்வளவாக மக்களை கவரவில்லை என்று கூறுவது தான் உண்மையாக இருக்கும்.
முதல் சீசனை அடித்துக்கொள்ள வேறு எந்த சீசனும் அமையவில்லை என்று கூறினால் மக்களும் ஒப்புக் கொள்வார்கள். அதில் ஆரோக்கியமான சண்டை, காதல், நட்பு, கலாட்டா என இருந்தது.
ஆனால் இந்த சீசனில் நிறைய சண்டை, தவறாக பேசுவது என்பன போன்ற விஷயங்கள் தான் அதிகம் இருந்தன, அசீமிற்கு டைட்டிலை கொடுத்தது மக்கள் பலருக்கும் சுத்தமாக பிடிக்கவே இல்லை என்றே கூறலாம்.
சம்பளம்
இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக பைனலுக்கு சென்ற விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.
ஒரு நாளைக்கு ரூ. 18 ஆயிரம் என் பேசப்பட்டு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. 105 நாட்கள் கணக்கு வைத்து பார்த்தால் அவருக்கு ரூ. 18 லட்சம் சம்பளம் கிடைத்திருப்பதாக தெரிகிறது.
ஷிவினும் இதே சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு தான் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அசீம் ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் பேசப்பட்டு 105 நாட்களுக்கு ரூ. 25 லட்சம் வாங்கியிருப்பதாக தெரிகிறது.
சொந்தமாக புதிய Restaurant திறந்துள்ள நடிகை பிரியா பவானி ஷங்கர்- அவரே வெளியிட்ட வீடியோ