பிக்பாஸ் 6வது சீசனில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?- குறைந்த வாக்குகள் இவருக்கு தானா, வெளிவந்த ரிசல்ட்
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கி இதுவரை 10 நாட்கள் ஆகிவிட்டன, ஆனால் பரபரப்பான விஷயங்கள் ஒன்றும் நடக்கவில்லை.
இனி கண்டிப்பாக நடந்துவிடும் என தெரிகிறது, அனைவரும் தங்களது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
இதில் ஜி.பி. முத்து வீட்டில் தாக்குபிடிக்க முடியாமல் தனது தம்பியை ஏதாவது செய்து வெளியே கொண்டு சென்றுவிடு என கெஞ்சுகிறார், நிகழ்ச்சியில் அவர் முழு ஈடுபாடுடன் இருக்கவில்லை.
இந்த வார எலிமினேஷன்
ஒருபக்கம் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ஓட்டிங் நடந்து வருகிறது. போட்டியாளர்கள் வெளியே இவரை தான் அனுப்ப வேண்டும் என நாமினேட் செய்துவிட்டார்கள்.
மக்களும் தினமும் தங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு ஓட் செய்து வருகிறார்கள். தற்போது வரையிலான நிலவரப்படி நடன கலைஞர் சாந்தி அவர்கள் தான் குறைந்த வாக்குகள் பெற்று கடைசியில் இருக்கிறாராம். அவருக்கு முன் இடத்தில் மகேஸ்வரி இருக்கிறார்.
இதில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.