பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷ்யா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 7. கடந்த அக்டோபர் 1ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள், பரபரப்பு திருப்பங்கள் என நிறைய நடந்து வருகிறது.
கடந்த வாரம் 2 டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டைவிட்டு பூர்ணிமா மற்றும் அக்ஷயா வெளியேறுவார்கள் என பலரும் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அக்ஷ்யா மற்றும் பிராவோ இருவரும் வெளியேறினார்கள்.
சம்பள விவரம்
50 நாட்களை கடந்து பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த அக்ஷயா ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளமும் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த பிராவோ ரூ. 12 ஆயிரம் சம்பளமும் பேசி நிகழ்ச்சிக்குள் வந்துள்ளனர்.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
