இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால்.. பிக் பாஸில் இருந்து வெளியேறிய அனன்யா முதல் வீடியோ
அனன்யா
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்குள் மொத்தம் 18 போட்டியாளர்கள் வந்திருந்தனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது என பலரும் நினைத்த நிலையில் கமல் வந்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார்.
எலிமினேஷன் இருந்தாலும் பவா செல்லத்துரை தான் வெளியே போவார் என எல்லோரும் கூறினார்கள். ஆனால் போட்டியாளர்களின் கணிப்புக்கு மாறாக அனன்யா எலிமினேட் ஆனார்.
டாட்டூ விஷயத்திற்காக விசித்ரா உடன் சண்டை போட்டதை தவறிய வேறு எதுவும் ஒரு வாரத்தில் அவர் செய்யவில்லை.
வீடியோ
இந்நிலையில் வெளியில் வந்த அனன்யா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் நன்றி என கூறி இருக்கிறார்.
இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் உங்கள் அன்பு இன்னும் அதிகமாக கிடைத்திருக்கும் என அவர் கூறி இருக்கிறார்.
வீடியோ இதோ..