பிக்பாஸ் 7ல் கெத்து காட்டிவரும் நடிகை அர்ச்சனாவின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- அழகிய போட்டோ
பிக்பாஸ் 7
ஒவ்வொரு வருடமும் 100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம். முதல் சீசன் ஆரம்பித்து அடுத்தடுத்து என 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால் இந்த 7 சீசனிலும் முதல் சீசனில் பங்குபெற்ற ஓவியாவை கொண்டாடியதை போல் ரசிகர்கள் வேறு யாரையும் கொண்டாடவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் ஓவியா செய்த விஷயங்கள், சொன்ன வார்த்தை என எல்லாமே டிரண்ட் ஆனது.
ஒரே ஆளாக மொத்த போட்டியாளர்களுடன் மோதி கெத்து காட்டி வந்தார்.
அர்ச்சனா
இப்போது 7வது சீசனில் ஓவியா போல் தனி ஆளாக பிக்பாஸ் வீட்டில் கெத்து காட்டி அனைவரையும் தெறிக்கவிட்டு வருகிறார் அர்ச்சனா.
விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமான இவர் பாதியிலேயே தொடரில் இருந்து விலகியிருந்தார். அதன்பின் நிறைய போட்டோ ஷுட்கள் செய்து கலக்கிவந்த அர்ச்சனா இப்போது பிக்பாஸில் மாஸ் செய்து வருகிறார்.
இவர் தனது அம்மா, அப்பா, சகோதரியுடன் எடுத்த அழகிய போட்டோ இதோ,