கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணுமா.. நிக்சனை வறுத்தெடுத்த அர்ச்சனாவின் அப்பா
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்கு இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்களின் பெற்றோர் வர அவர்கள் எமோஷ்னல் ஆனார்கள்.
பல்வேறு விஷயங்கள் பற்றி அர்ச்சனாவின் அப்பா ரவிச்சந்திரன் பேசி இருந்தார். அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே நடந்த சண்டை பற்றி பேசிய அவர், 'நிக்சன் நல்லவர் தான். கோபம் தான் அவரை இப்படி ஆக்குகிறது' என தெரிவித்தார்.
கள்ளிப்பால்..
"சண்டை முடிந்த பின் வேறு ஒருவரிடம் பேசும்போது, 'சின்ன வயதிலேயே கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணும்' என சொன்னீங்க. அது ரொம்ப ரொம்ப hurting ஆக இருந்தது" என அர்ச்சனாவின் அப்பா கூறினார்.
'நானா.. அப்படி பேசினேனா..' என நிக்சன் எதுவும் தெரியாதது போல சமாளித்தார்.
மேலும் அர்ச்சனா பாத்ரூமில் அழுதுகொண்டிருக்கும்போது விக்ரம் அவரை கிண்டல் செய்து காட்டிய ரியாக்ஷன் பற்றியும் அர்ச்சனாவின் அப்பா தாக்கி பேசி இருக்கிறார்.