என் குடும்பம் அப்படி.. எல்லாமே போய்டும்: பிக் பாஸில் அர்ச்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு
பிக் பாஸ் 7ம் சீசனில் கடந்த வாரம் ஐந்து புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். ராஜா ராணி 2 சீரியல் புகழ் நடிகை அர்ச்சனாவும் அதில் ஒருவர்.
பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் சென்ற நாளிலேயே மற்றவர்கள் பேசியதை கேட்டு அர்ச்சனா கதறி அழ தொடங்கிவிட்டார். வாரம் முழுக்க அவர் கண்ணீரும் கம்பலையுமாக இருந்ததாக கமலஹாசன் இன்று விமர்சித்தார்.
இந்த விஷயத்தை கேட்டு அர்ச்சனா மேலும் கதறி கதறி பாத்ரூமில் அழ தொடங்கிவிட்டார். மற்ற போட்டியாளர்கள் சிலர் அவரை ஆறுதல்படுத்தினார்கள்.
என்னை அனுப்பிடுங்க..
அதன் பின் அர்ச்சனா கேமரா முன்பு சென்று தன்னை வெளியில் அனுப்பிவிடும்படி கேட்டுவருகிறார்.
"தயவு செஞ்சு என்னை அனுப்பிடுங்க. என் குடும்பம் ரொம்ப சென்சிடிவ். எனக்கு வெளியே ஒரு கெரியர் இருக்கு. இப்படி ஒரு பெயர் எடுத்தால் எல்லாமே பாதிக்கும். அதனால் என்னை வெளியில் அனுப்பிடுங்க" என அர்ச்சனா பேசி இருக்கிறார்.
அவர் தொடர்ந்து இப்படி கேட்டு வருவதால், பவா செல்லத்துரை போல அர்ச்சனாவும் விரைவில் வெளியில் செல்ல வாய்ப்பிருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.