விஜய்யின் 68வது படத்தில் பிக்பாஸ் 7 பிரபலமா, அட இவரா?- பல வருடத்திற்கு பின் கூட்டணி
விஜய்யின் 68
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் லியோ. த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைத்ததால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
இப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். AGS நிறுவனம் தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து வருகிறது.

தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி புகழ் யுகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டு திருப்பாச்சி என்ற படத்தில் யுகேந்திரன் கடைசியாக விஜய்யுடன் நடித்தார். இப்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்துள்ளனர்.