சிறுவயதில் கியூட்டாக இருக்கும் இந்த பிக்பாஸ் 7 பிரபலம் யார் தெரியுமா?- தீயா விளையாடுறவங்க தான்
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இருக்கும் போட்டியாளர்கள் வெளியேற வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக சிலர் என விறுவிறுப்பின் உச்சமாக என்ன நடக்கிறது இந்த பிக்பாஸ் 7ல் என ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.
கடந்த வாரம் பிக்பாஸ் 7ல் எந்த ஒரு எலிமினேஷனும் நடக்கவில்லை காரணம் மிக்ஜாம் புயலால் மக்கள் பாதிக்கப்பட ஓட்டிங் சரியாக வரவில்லை, எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என கூறியிருந்தனர்.
சிறுவயது போட்டோ
பிக்பாஸ் 7வது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்து தீயாக விளையாடி வருகிறார் நடிகை அர்ச்சனா. கடந்த வார எபிசோடுகளில் யாருக்கும் அஞ்சாமல் தன் நியாயத்தை கூறி வந்தார்.
தற்போது இவரது சிறுவயது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.