பிக்பாஸ் 7 நிகழ்ச்சி புகழ் ஐஸு காதலன் இவரா?- வைரலாகும் போட்டோ
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சிகளில் ஹிட்டாக ஓடும் ஒரு நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதே ஒரு சிறப்பான விஷயமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த 7வது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர், இதுவரை 5 பேர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அதேவேகத்தில் 5 போட்டியாளர்களை வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக பிக்பாஸ் குழு உள்ளே அனுப்பியுள்ளனர்.
இனி வரும் நாட்களில் ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜஸு காதலர்
எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நடக்கும் ஒரு சம்பவம் இந்த சீசனில் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். வேறு என்ன என்ன காதல் ஜோடி உருவாகப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு தான்.
அட பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கோபி என்ன இப்படியொரு கெட்டப் மாறிவிட்டார்- லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
இப்போது பிக்பாஸ் வீட்டில் மருத்துவ முத்தத்திற்கு மேல் சில விஷயங்கள் நடந்து வருகிறது. நிக்சன் மற்றும் ஐஸு பற்றி தான் இப்போது அதிக பேச்சு, ஆனால் ஐஸு தனக்கு காதலன் வெளியே உள்ளான் என்று கூறியிருந்தார்.
எனவே அவரது காதலர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் நிரூப் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.