பிக்பாஸ் புகழ் அக்ஷாரா ரெட்டி வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு- யாருமே இல்லையா பிரபலத்துக்கு?
பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நமக்கு பரீட்சயப்படாதவர்களும் இந்நிகழ்ச்சியால் பிரபலம் அடைகிறார்கள்.
அப்படி பிக்பாஸ் 5வது சீசனில் மாடல் அழகியாக கலந்துகொண்டு மக்களிடம் பிரபலம் ஆனவர் தான் அக்ஷாரா ரெட்டி.
இந்த நிகழ்ச்சியில் 80 நாட்கள் வரை உள்ளே இருந்தார், பின் குறைந்த வாக்குகள் பெற்று திடீரென்று அக்ஷ்ராவும் வருனும் ஒன்றாகவே வெளியேற்றப்பட்டனர்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற கிசுகிசுப்பு சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கமும் கொடுத்திருந்தனர்.
உயிரிழப்பு
அக்ஷ்ராவின் தந்தை சுதாகர் ரெட்டி மெட்ராஸ் ஐஐடியில் படித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு தொழில் அதிபராகவும் இருந்துள்ளார். ஆனால் அவர் எப்போதோ உயிரிழந்துள்ளார்.
அக்ஷரா தனது அம்மா மற்றும் அண்ணனுடன் தான் வசித்து வந்துள்ளார். இப்போது அவரது அம்மாவும் உயிருடன் இல்லை, அண்மையில் அவர் உயிரிழந்துள்ளார்.