பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜோவிகா வாங்கிய சம்பளம்- எத்தனை லட்சம்?
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7, இந்த நிகழ்ச்சி வழக்கமாக 6 சீசன் பார்த்தவர்களுக்கு மிகவும் புதுமையாக தெரிகிறது.
காரணம் இதுவரை நடக்காத விஷயங்கள் எல்லாம் நடந்து வருகிறது.
அதிரடியாக எவிட் செய்கிறார்கள், 5 பேர் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக அனுப்புகிறார்கள், மக்கள் என்னடா நடக்கும் நிகழ்ச்சியில என கேட்கும் அளவிற்கு உள்ளது.
விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சியில் இருந்து அக்ஷயா மற்றும் பிராவோ கடந்த வாரம் வெளியேறி இருந்தார்கள்.
ஜோவிகா சம்பளம்
கடந்த வாரம் பிக்பாஸில் 2 எலிமினேஷன் ஆனால் இந்த வாரம் 1 எலிமினேஷன் தான், வனிதாவின் மகள் ஜோவிகா வெளியேறிவிட்டார்.
60 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜோவிகாவின் 1 வாரத்திற்கு ரூ. 2 லட்சம் என சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்ததாக கூறப்படுகிறது.