காசை தவிர மற்ற எல்லாத்தையும் சம்பாதித்துவிட்டேன்- பிக்பாஸ் 7 பிரபலம் பிரதீப் போட்ட எமோஷ்னல் பதிவு, போட்டோவுடன் இதோ
பிக்பாஸ் 7
கடைசியாக முடிவடைந்த பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் பிரதீப் ஆண்டனி.
ஆனால் இவரை தவறு செய்தார் என ஒரு கேங் பிரச்சனையை கிளப்ப உடனே கமல்ஹாசனால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதில் வைல்டு கார்டு என்டரியாக நுழைந்த அர்ச்சனா, பிரதீப்புக்கு நியாயம் கேட்டு போராடியதால் அனைவரது பேவரெட் போட்டியாளராக மாற, கடைசியில் டைட்டிலையும் வென்றார்.
பிக்பாஸில் இருந்து வெளியே சென்ற பிரதீப் சினிமா தனது கனவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.
எமோஷ்னல் போஸ்ட்
இந்த நிலையில் பிரதீப் தனது சமூக வலைதளத்தில் ஒரு எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அதில் அவர், எனக்கு 34 வயது ஆகிடுச்சு, திரும்பி பார்த்தா காச தவிர எல்லாமே சம்பாதிச்சு இருக்கேன்.
எதுவுமே இல்லடா எனக்கு, இருந்தாலும் எனக்கு நல்ல சாப்பாடு போட்டு, படிக்க வைத்து, இன்னும் என பேஷனுக்காக சப்போர்ட் பண்ணிட்டு இருக்கும் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என பதிவிட்டுள்ளார்.
அதோடு தனது சிறுவயதில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
34 vayasu achu? Thirumbi paatha kasa thavira ellame sambathichu iruken ? Edhume illadha podhum enaku nalla sapadu pottu, padika vechu, innum en passion ku support pannitu iruka en friends and family ku evlo nandri sonnalum pathathu ? pic.twitter.com/VolOmnYSPO
— Pradeep Antony (@TheDhaadiBoy) March 20, 2024