பிக்பாஸ் விக்ரம் எடுத்த அதிர்ச்சி முடிவு! மோசமான ட்ரோல்களால் இப்படியா?
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி தம்பி கண்ணன் ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் சரவண விக்ரம்.
அந்த தொடர் முடியும் முன்பே விக்ரம் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக சென்றுவிட்டார். அவர் ஷோவில் சிறப்பாக எதுவும் செய்யவில்லை என ஆரம்பத்தில் இருந்தே விமர்சனம் எழுந்து வந்தது.
செட் ப்ராப்பர்டி என வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் அவரை ட்ரோல் செய்தனர். இருப்பினும் 84 நாட்கள் வரை அவர் ஷோவில் இருந்தார். மேலும் கடைசி வாரத்தில் மீண்டும் வீட்டுக்குள் சென்ற விக்ரம் மாயாவிடம் பேசியதை பற்றி அவரது சொந்த தங்கையே விமர்சித்தார்.
அதிர்ச்சி முடிவு
தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் சரவண விக்ரம் அதிகம் ட்ரோல்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
"I quit my passion" என குறிப்பிட்டு இருப்பதால், நடிப்பதை தான் நிறுத்தப்போகிறார் என அதிர்ச்சி தகவல் பரவி வருகிறது.
இருப்பினும் அந்த பதிவை அவர் தற்போது நீக்கிவிட்டார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
