ப்ளீஸ் இப்படி செய்யாதீர்கள், பிக்பாஸ் 7 சரவண விக்ரம் தங்கை எமோஷ்னல்- அவரே வெளியிட்ட வீடியோ
சரவண விக்ரம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமானவர் சரவண விக்ரம்.
அந்த சீரியல் மூலம் பல லட்ச ரசிகர்களை பெற்றவர் சரவண விக்ரம். தொடர் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பு இப்போது பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டு இருக்கிறார்.
எனவே ரசிகர்கள் இவர் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடுவார் என எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அவர் அப்படி ஒன்றும் சரியாக விளையாடவில்லை.
அதற்கு பதிலாக அவர் சொல்லும் சில விஷயங்களை மட்டும் காமெடி காட்சிகள் வைத்து கலாய்த்து வீடியோ வெளியிடுகிறார்கள்.
தங்கையின் வீடியோ
அப்படி தனது அண்ணனை கலாய்த்து வீடியோ வெளியிடுபவர்களுக்கு அவரது தங்கை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் முழுதாக பார்க்கும் அளவிற்கு நேரம் இருக்காது பாதி பேர் நீங்கள் போடும் மீம்ஸ் மற்றும் டவுன்களை வைத்து தான் பிக் பாஸில் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது என்று நம்புவார்கள்.
அதனால் ஒருவரை பற்றி போடும் போது கவனமாக போடுங்கள். அதே போல என் அண்ணன் அவங்க ஃபேன்ஸ் பற்றி ஷேர் பண்ணியிருந்தாங்க.
அதை எடுத்து `யாருப்பா இவங்க ஃபேன்ஸ்’ என்கிற மாதிரியெல்லாம் அதையுமே ரொம்ப ட்ரோல் பண்ணி போட்டிருந்தீங்க.
ஒருவரை பற்றி சொல்லும் போது பாசிட்டிவாக சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் முடியவில்லை என்றால் நெகட்டிவ் விஷயங்களை கூட சொல்லலாம். ஆனால், நெகட்டிவ் விஷயத்தை உருவாக்கி பொய்யான விஷயத்தை பரப்பாதீர்கள் என்று பேசி இருக்கிறார்.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
