இவ்ளோ வக்கிரம் புடிச்சவனா நிக்சன், அசிங்கமா இல்லை- செம காட்டமாக பிக்பாஸ் 7 வினுஷா
பிக்பாஸ் 7
விஜய் டிவியின் ஹிட் ஷோவாக இப்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதுநாள் வரை செம ஹிட் ஆனதா என்பது தெரியவில்லை, ஆனால் கடந்த வாரம் பிரதீப் வெளியேற்றத்திற்கு பிறகு நிகழ்ச்சி குறித்து பரபரப்பாக மக்கள் பேசி வருகிறார்கள்.
'பிரதீப் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது போல அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். இதனிடையில் நிக்சன் போட்டியாளர்கள் குறித்து பேசிய விஷயங்களை பிக்பாஸ் எல்லா போட்டியாளர்களுக்கும் போட்டு காட்டி வருகிறார்.
பொங்கிய வினுஷா
நிக்சன், வினுஷாவை பார்த்து நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு எது எது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எதுவுமே இல்லாத ஒரு பெண்ணாக வினுஷா இருக்கிறார் என நிக்சன் பேசியது குறித்து பதிவு ஒன்று போட்டுள்ளார்.
வினுஷா தனது இன்ஸ்டாவில், முதல் வாரத்தில் நிக்சனுக்கும் எனக்கும் நல்ல விதமான பேச்சுவார்த்தைகள் இருந்து வந்தது.
அவனை ஒரு சகோதரன் போலத்தான் நினைத்து பழகி வந்தேன். என்னை கிண்டல் செய்து வந்த நிலையிலும், அவன் தவறான நோக்கத்தில் கிண்டல் செய்கிறான் என நினைக்கவில்லை.
ஆனால், அவன் என்னை பாடி ஷேமிங் பண்ணது பற்றி எனக்கு சுத்தமா தெரியாது. வெளியே வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் அவன் எவ்ளோ கேவலமானவன் என புரிகிறது என விளாசி உள்ளார்.
You May Like This Video

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

காணாமல் போன 4,000 டன் நிலக்கரி.., மழையால் அடித்துச் சென்றதாக அமைச்சர் சர்ச்சை விளக்கம் News Lankasri
