பிக் பாஸ் பிரதீப்புக்கு வந்த ஹீரோ வாய்ப்பு.. கவனுக்காக விட்டுக்கொடுத்து சூப்பர்ஹிட் ஆன படம்
பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கும் பிரதீப் குமார் ஆரம்பத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தற்போது ரசிகரங்களை அதிகம் கவர்ந்து வருகிறார். கமல் ஹாசன் வரும் எபிசோடுகளில் பிரதீப்புக்கு ரசிகர்கள் கைதட்டல் அதிகம் வருவதும் எல்லோருக்கும் தெரியும்.
இதற்கு முன்பே கவின் பங்கேற்ற சீசனில் அவரது நண்பராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பிரதீப் எல்லோர் முன்பும் கவின் கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்த அளவுக்கு அவர்கள் நண்பர்கள்.
விட்டுகொடுத்த படம்
டாடா படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் பிரதீப் தான் தேர்வானாராம். ஆனால் அவர் அதில் ஹீரோவாக கவின் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லி அதை கவினுக்கு கொடுத்திருக்கிறார்.
டாடா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் பலரும் பிரதீப்பை பாராட்டி வருகின்றனர்.