பிக்பாஸ் 7 வீட்டிற்குள் சென்று மாயாவிற்கு சப்போட் செய்த விக்ரம்- அவரது தங்கை போட்ட கோபமான டுவிட்
பிக்பாஸ் 7
தமிழ் சினிமாவிற்கு மக்களிடம் பெரிய ரீச் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய இடம் உள்ளது.
அன்றாடம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பொழுதுபோக்காக சீரியல்கள் தான் உள்ளன. அதனை தெரிந்தகொண்ட முன்னணி தொலைக்காட்சிகளும் நல்ல கதையுள்ள விறுவிறுப்பாக செல்லும் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமானவர் தான் சரவண விக்ரம், அந்த தொடர் அவருக்கு பிரபலத்தை கொடுக்க பிக்பாஸ் சென்றார்.
சரவண விக்ரம்
இந்த நிகழ்ச்சியில் இவர் எதையுமே கண்டுகொள்ளவில்லை, ஆனால் தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்று சொல்லிக்கொண்டது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
பேமிலி சுற்றில் வீட்டிற்குள் வந்த விக்ரம் தங்கை மாயாவை நம்பாவே என்று கூறியிருந்தார், அந்த வாரமே அவரும் வெளியேறிவிட்டார்.
இப்போது மீண்டும் வீட்டிற்குள் சென்றுள்ள விக்ரம், மாயாவிடம் பேச அதைப்பார்த்த அவரது சகோதரி உங்கள் சொந்த குடும்பத்தை விட மற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அவரது பதிவு இப்போது சமூக வலைதளங்களில் மக்களிடம் வைரலாகி வருகிறது.