முடியப்போகும் குக் வித் கோமாளி, வந்தது பிக்பாஸ் 7வது சீசன் அப்டேட்- இந்த விஷயம் தெரியுமா?
பிக்பாஸ் 7
TRPயின் நாயகனாக கடந்த சில வருடங்களில் இருந்து கலக்கி வருகிறது பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்த வருடம் ஜனவரி மாதம் தான் 6வது சீசன் முடிவுக்கு வந்தது, உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடங்கியிருந்தார்கள்.
இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, எனவே பிக்பாஸ் வேலைகளில் குழுவினர் இறங்கிவிட்டதாக தெரிகிறது.
அடுத்த அப்டேட்
தற்போது பிக்பாஸ் 7வது சீசன் அடுத்த மாதம் அதாவது ஜுலை 2வது அல்லது 4வது வாரத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது, ஆனால் இதுவரை நிகழ்ச்சி குறித்து ஒரு அப்டேட்டும் வந்தது இல்லை.
இந்த சீசனில் போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்யப்போகிறார்கள் என்றால், இரண்டு செலிபிரிட்டிகள், மக்களுக்கு பரீட்சையமில்லாத இரண்டு செலிப்ரட்டிகள், சின்ன திரையை சேர்ந்த இரண்டு நடிகர்கள், தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் இரண்டு பேர், பொதுமக்களில் இருந்து மூன்று பேர், மாடலிங் துறையை சேர்ந்த இரண்டு பேர், சோசியல் மீடியா பிரபலங்கள் இரண்டு பேர், திருநங்கை 1, சமூக சேவை அல்லது அரசியலை சேர்ந்த இரண்டு பேர், பேச்சாளர்கள் இரண்டு பேர், அயல் நாட்டவர்கள் இரண்டு பேர் மற்றும் நடனம் ஆடுபவர்கள் இரண்டு பேர் என தேர்வு செய்யப்போகிறார்களாம்.
இதனால் மக்கள் யார் யார் வரப்போகிறார்கள் என இப்போதே பேச தொடங்கிவிட்டனர்.
அதேபோல் கடந்த சீசன் முடிக்கும் போது கமல்ஹாசன் மீண்டும் சந்திப்போம் என கூறிவிட்டு சென்றதால் அவரே 7வது சீசனையும் தொகுத்து வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டாப் தொகுப்பாளினியாக கலக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே கலக்கல் புகைப்படங்கள்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
