புது நாமினேஷன் லிஸ்டில் 7 போட்டியாளர்கள்.. அடுத்து வெளியேறப்போவது இவரா
பிக் பாஸ் 7ம் சீசனில் இருந்து முதல் ஆளாக அனன்யா நேற்று எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து இன்று பவா செல்லத்துரை வெளியேறுவதாக பிடிவாதமாக பேசி வெளியில் சென்று இருக்கிறார்.
இதனை அடுத்து இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் பலரும் விஷ்ணு, மாயா பெயரை தான் கூறி இருக்கின்றனர்.
நாமினேஷன் லிஸ்ட்
அனைவரும் நாமினேஷன் சொல்லி முடித்தபிறகு பிக் பாஸ் லிஸ்டை அறிவித்தார்.
- அக்ஷயா - 4 வாக்குகள்
- விசித்ரா - 2 வாக்குகள்
- ஜோவிகா 3 வாக்குகள்
- பூர்ணிமா - 2 வாக்குகள்
- விஷ்ணு,
- மாயா
- பிரதீப்
ஏறகனவே அக்ஷயா மற்றும் வினுஷா சரியாக perform செய்யவில்லை என பிக் பாஸ் தண்டனை கொடுத்து இருக்கிறார். மேலும் பூர்ணிமாவையும் கமல் வார இறுதியில் விமர்சித்து இருந்தார். இன்னும் involvement தேவை என கமல் அவரிடம் கூறி இருந்தார்.
அதனால் இந்த வாரம் பூர்ணிமா அல்லது அக்ஷயா எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.