ஐஷுவை வெளியில் அனுப்ப சொல்லி சண்டை போட்ட பெற்றோர்.. சேனல் என்ன சொன்னது பாருங்க
இது பிக் பாஸ் வீடா இல்லை காதலர்கள் குதூகலமாக இருக்கும் பார்க்கா என எல்லோரும் கேட்கும் அளவுக்கு தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் இருந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக ஐஷு மற்றும் நிக்சன் ஜோடி எல்லைமீறி முத்தம் கொடுக்கும் அளவுக்கு செல்வது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பிக் பாஸ் ரசிகர்கள் முகம்சுளிக்கும் வகையில் அவர்கள் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
ஐஷுவை வெளியில் அனுப்ப சொன்ன பெற்றோர்?
இந்நிலையில் ஐஷுவின் பெற்றோர் தங்களது மகளின் செயலால் குடும்ப மானம் போகிறது என சொல்லி அவரை ஷோவில் இருந்தே வெளியில் அனுப்பும்படி கேட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாங்களே அவருக்கு அறிவுரை சொல்கிறோம், தகுந்த காரணங்கள் இல்லாமல் வெளியில் அனுப்ப முடியாது என ஐஷுவின் பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறதாம் பிக் பாஸ் டீம்.