இனி ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.. இந்த ஒரு காரணத்துக்காக பிக் பாஸில் இருந்து வெளியேறிய பவா செல்லதுரை
பிக் பாஸ் 7
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் எலிமினேஷன் நடந்த அடுத்த நாளே பவா செல்லதுரை என்ற இன்னொரு போட்டியாளரும் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இது தற்போது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் எலிமிநேஷன் யார் என அறிவிக்கும் முன்பு கமல் எல்லோரிடமும் கருத்து கேட்டார். அப்போது கிட்டத்தட்ட எல்லோரும் பவா தான் எலிமினேட் ஆவார் என கூறினார்கள். ஆனால் அதன் பின் அனன்யா எலிமினேட் ஆனது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது..
அனைத்து போட்டியாளர்களும் தன்னை ஒதுக்கிவிட்டதை உணர்ந்து பவா செல்லதுரை வருத்தத்தில் இருந்த நிலையில், இனி ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்க முடியாது என கூறிவிடுகிறார்.
இது தான் இறுதி முடிவா என கேட்ட பிக் பாஸ், அதன் பின் பவாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை வெளியில் அனுப்ப ஒப்புக்கொள்வதாக கூறுகிறார்.