பிக் பாஸ் வீட்டுக்கு போகிறேனா.. நடிகர் பயில்வான் ரங்கநாதன் கொடுத்த பதில்
பிக் பாஸ் 7ம் சீசன் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் கமல் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த முறை ஒரு வீடு இல்லை, இரண்டு வீடு இருக்கிறது என கமல் அறிவித்து இருக்கிறார். சும்மாவே சண்டை போட்டு வீட்டை ரெண்டாக்குவார்கள், ஆனால் இந்த முறை வீடே இரண்டு இருக்கிறது. என்ன ஆகுமோ என கமலே ஆச்சர்யமாக பேசி இருந்தார்.
மேலும் போட்டியாளர்களாக வரப்போகும் பிரபலங்களின் பெயர்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்போன நடிகர் பயில்வான் ரங்கநாதன் பிக் பாஸ் வருகிறார் என தகவல் சமீபத்தில் பரவியது.
விளக்கம்
இந்நிலையில் இது பற்றி பயில்வான் விளக்கம் கொடுத்து இருக்கிறார். "பிக் பாஸ் போனால் சண்டை போட வேண்டும், லவ் பண்ணனும்."
"அது சரிப்படாது. அதனால் விஜய் டிவி எவ்வளவு காசு கொடுத்தாலும் நான் பிக் பாஸ் செல்ல மாட்டேன்" என கூறி இருக்கிறார்.