எல்லைமீறி ஆபாசமாக பேசும் பிரதீப்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! இந்த முறையாவது கமல்ஹாசன் கேட்பாரா?

By Parthiban.A Nov 01, 2023 02:09 AM GMT
Report

பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் புதிதாக 5 போட்டியாளர்கள் சென்று இருக்கும் நிலையில் அவர்கள் எல்லோரையும் திட்டம் போட்டு ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அவர்களை டார்கெட் செய்ய பிரதீப் திட்டம்போட்டு பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை மூளை சலவை செய்திருக்கிறார்.

ஆனால் இன்று நடந்த ஒரு டாஸ்க் மொத்தமாக நிலைமையை மாற்றி இருக்கிறது. பிரதீப் தலையில் இருந்த மணி அடித்துவிட்டது என கூல் சுரேஷ் கூறியதால் அவரை படுமோசமான கெட்ட வார்த்தைகளில் பிரதீப் திட்டி இருக்கிறார்.

எல்லைமீறி ஆபாசமாக பேசும் பிரதீப்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! இந்த முறையாவது கமல்ஹாசன் கேட்பாரா? | Bigg Boss 7 Tamil Pradeep Abuses Cool Suresh

எல்லைமீறும் பிரதீப்..

கூல் சுரேஷ் பற்றி தகாத வார்த்தைகளில் பிரதீப் திட்டிய நிலையில் அவர் சண்டை போட்டார். பலரும் பிரதீப் செய்வது தவறு என கூறினாலும் அவர் கேட்பதாக இல்லை.

இதுவரை கமல்ஹாசன் வரும் எபிசோடுகளில் பிரதீப் பேசும்போது ரெஸ்பான்ஸ் அதிகம் இருக்கும். ஆனால் தற்போது பிரதீப் எல்லைமீறி செல்வதால் அவரது பெயர் நிச்சயம் டேமேஜ் ஆகும் என எதிர்ப்பார்க்கலாம்.

நெட்டிசன்களும் பிரதீப்பை தற்போது ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள். கமல் ஹாசன் அவரை கேள்வி கேட்பாரா இல்லையா என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 

எல்லைமீறி ஆபாசமாக பேசும் பிரதீப்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! இந்த முறையாவது கமல்ஹாசன் கேட்பாரா? | Bigg Boss 7 Tamil Pradeep Abuses Cool Suresh

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US