ரெட் கார்டை குடும்பத்துடன் கொண்டாடிய பிரதீப்.. வைரல் போட்டோ! விஜய் டிவி, கமலுக்கு பதிலடி?
ரெட் கார்டு
தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி நேற்று ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல போட்டியாளர்கள் புகார் சொன்ன நிலையில், கமல் வாக்கெடுப்பு நடந்தி ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றிவிட்டார். அவரை மேடைக்கு அழைத்து கூட பேசவில்லை கமல்.
கொண்டாடிய பிரதீப்
இந்நிலையில் கமல் கொடுத்தனுப்பிய ரெட் கார்டை கொண்டு போய் பிரதீப் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. கமல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு பதிலடியாக தான் பிரதீப் இப்படி செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.