50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 TRP விவரம்- பிரதீப் Red Card பிறகு உயர்ந்ததா?
பிக்பாஸ் 7
எத்தனை பிக்பாஸ் வந்தாலும் முதல் சீசனை போல வராது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
2ல் இருந்து 6வது சீசன் வரை ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று தான் பார்த்தார்கள் ஆனால் அவ்வளவு ஆர்வமாக இல்லை.
இந்த 7வது சீசனாவது முதல் சீசன் அளவிற்கு இருக்குமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும், இந்த சீசன் வேற ரகம்.
உள்ளே அனுப்புகிறார்கள், அடுத்த வாரமே வெளியே அனுப்புகிறார்கள், மீண்டும் வெளியே அனுப்பியவர்களை உள்ளே அனுப்புகிறார்கள் இப்படி மாறி மாறி நடக்கிறது, ரசிகர்கள் ஒரு கணக்கிற்கு வர முடியவில்லை.
TRP ரேட்டிங்
இந்த நிலையில் பிக்பாஸ் 7வது சீசனின் TRP விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சீசன் தொடங்கும் போது டிஆர்பி 6 ஆக இருந்துள்ளது, ஆனால் பிரதீப் ரெட் கார்டு எபிசோடிற்கு பிறகு இதன் டிஆர்பி 6.7 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 46வது வாரத்தில் டிஆர்பி 6.9 ஆக உயர்ந்ததாக சில விவரங்கள் தெரிவிக்கின்றன.